YOOtheme
Sunday, 05 September 2010
ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகளின் 62வது ஜென்ம தினம்
PDF Print E-mail
Written by Administrator   
Monday, 05 April 2010 12:09

 

 


கொழும்பு, தெஹிவளை ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலய ஸ்தாபகர் ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகளின் 62வது ஜென்மதினமான 08.04.2010 அன்று காலை 9.00 மணி முதல் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானுக்கு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தின் 13வது வெளியீடாகஸ்ரீ ஆஞ்சநேய தோத்திரம்என்ற இறுவட்டு வெளியிட ஏற்பாடுகள் செய்யப்ட்டுள்ளன ஏமுது. மதியின் இசையில் பாடகர் பு.திலீபன் அவர்களின் குரல் வளத்தில் இவ்விறுவட்டு உருவாகியுள்ளது.

சமயங்கள் காலத்திற்கு காலம் அவதாரபுருஷர்களையும் ஞானிகளையும் ஆற்றல் மிகுந்த அறிவாளிகளையும் உருவாக்கி மக்களுக்கு வழிகாட்டி வந்துள்ளது. இவர்களால் நிறுவப்பட்ட ஆதீனங்கள், மடாலயங்கள், நிறுவனங்கள் யாவுமே சமுதாய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கின்றன.

உலகிலே தர்மம் அருகி அதர்மம் ஓங்கிய வேளையிலே அந்த அளப்பரிய சக்தி தர்மத்தை காக்கவும் அதர்மத்தை அழிக்கவும் அவதாரம் எடுப்பது யாவரும் அறிந்த உண்மை. அதேபோன்று மனிதர்களாகிய நாங்கள் அந்த அளப்பரிய சக்தியை மறந்து, மாறான பாதையிலே செல்லும் போது எம்மை நல்வழிப்படுத்தவும் தன்சக்தியை அறிந்திடச் செய்யவும் ஆண்டவன் மாற்றுருவில் எம்மை அனுகுவதுண்டு. உதாரணமாக கைலையிலே பெற்ற சாபத்தின் பயனாக சுந்தர மூர்த்திநாயனார் அவர்கள் இப்புவியில் பிறந்து வாழ்ந்து இறைவனை மறந்திருந்த வேளையில், அவர் முன்பு கேட்ட வரத்தின் பயனாக சிவபெருமான் கிழவேதியர் வடிவில் வந்து தன்னை உணரச் செய்கின்றார். எதற்காக இறைவன் மாற்றுருவில் வரவேண்டும் என நீங்கள் கேட்கலாம். மக்களாகிய நாங்கள் எம் வழிகாட்டலை எம்மைப்போல ஒரு சாதாரண உருவிலேயே காண விரும்புகின்றோம். அவ்வாறாக எம்மை நல்வழிப்படுத்த ஒரு அவதார புருஷர் அவதரிக்கும் போது நாம் அவரை பக்தி செலுத்தி வழிபடவேண்டும். எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை எமது இந்து தர்மம் இவ்வாறு கூறுகின்றது. “ இறைவா பக்தி செலுத்துவது எவ்வாறு என்பது எனக்குத் தெரியாது. அதற்கான வழியை நீயே எனக்கு அருள்வாய்என்பதாகும்.

இவ்வாறு நாம் பூரணம் அடைந்து விட்டால் இதுவே நாம் இறைவனை அடைவதற்காண முதற்படி. நாம் ஒருபடி அவரை நோக்கி ஏறினால் இறைவன் எம்மை நோக்கி  இருபடி இறங்குகின்றார். இன்றைய கலியுகத்தில் எம்மையெல்லாம் காத்தருள் செய்பவர் சிரஞ்சீவியான ஜெயவீர ஆஞ்சநேயப் பெருமானே.

இலங்கையில் இலைமறை காயாக காணப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாட்டை கடந்த 20 வருடங்களாக ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகள் தன்னுடைய அயராத மன்றாட்டத்தினாலும் ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானால் கொடுக்கப்பட்ட தெய்வீக அருளினாலும் வெளிக்கொணர்ந்து இன்று இலங்கையின் அனைத்து பாகங்களிலும் ஸ்ரீ ராம வழிபாட்டுடன் கூடிய ஆஞ்சநேயர் வழிபாடு உலகம் போற்றும் வகையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது

இலங்கையில் இராமாயண வரலாற்றை சான்றுபகர்வதற்காக ஆலயஅறங்காவலர்களால் ஆரம்பிக்கப்பட்ட இராமர் வராலாற்று ஆய்வுத் தகவல் மையம் இலங்கையில் இராமயண காவியத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகளுக்கு சான்று பகர்வதற்காக 2009ம் ஆண்டு முதல் கிட்டத்தடட பதினொரு மாதங்கள் இலங்கை அரசாங்க சுற்றுலாத்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்ட்ட ஆய்வுகளில் பல முக்கியமான தகவல்கள் வெளிக்கொணரப்பட்டது. உதாரணமாக இராவணன் பாவித்த விமான ஓடுபாதை, பண்டாரவளையில் ஸ்ரீபுரம், நுவரெலியாவில் சீதையம்மன் ஆலயம், சீதை கண்ணீர்விட்ட வாவி, மன்னாரில் தள்ளாடி மூலிகைவளாகம். இன்Nhரன்ன விபரங்கள் நாம் கண்டு ஆச்சரியப்படும்படி ஆராய்ச்சியினால் வெளிக்கொணரப்பட்டுள்ளது. ஆதற்கு உறுதுணையாக திரு. யுளாழம மரஅயச மயiவொ இந்தியாவின், பஞ்சாப்பிலிருந்து வருகைதந்து அதற்கு உதவி செய்தார்.

 

நற்சிந்தனையுடன் ஆஞ்சநேயரை வழிபடுங்கள் மனத்தைரியத்தைப் பெறுவீர்கள், பலவித அனுகூலங்களையும் அடைவீர்கள் என்று கூறி ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமி அவர்கள் ஆஞ்சநேய வணக்கத்தை இலங்கை மக்களிடையே அறிமுகப்படுத்தி அவர்களுக்காக மன்றாடிப் பிரார்த்தி அவர்களது வாழ்க்கையில்  ஒளிவீசப் பண்ணிணார். அதன் பயனாக மக்கள் தங்களைப் பீடித்திருந்த துன்பங்கள், துயரங்கள், தடைகள், நவக்கிரக தோஷங்கள் தொல்லைகளிலிருந்து விடுபட்டு வாழக்கூடிய வழிவகைகளைக் காட்டினார். அந்தச் சீரிய தொண்டு இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

சுவாமி அவர்கள் பிரபல தனியார் நிறுவனமொன்றில் உத்தியோகம்  பார்க்கும் காலங்களில் ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமானின் படத்தை ரணஜெயகம, தெஹிவளையில் வைத்து வழிபட்டு வந்தார். பின்பு அது 751, அலன் அவெனியு, தெஹிவளைக்கு மாற்றப்பட்டு, வாடகை வீட்டிலேயே வழிபட்டு வந்தார். 30.06.1996 அன்று மேற்படி முகவரியிலிருந்து 311,போதிருக்காராம வீதி, களுபோவில, தெஹிவளை என்னும் தற்போதைய முகவரிக்கு நிரந்தர அமைவிடமாக ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமான் கோவில் கொண்டருளினார். சுவாமிகள் நேரம் காலம் பாராது நீண்ட நேரம் மன்றாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.  மன்றாடும் குணமே அவரிடம் மேலோங்கியிருந்தது. இன்றும் அதுவே காணப்படுகின்றது

அளப்பெருங்கருணை தனிப்பெரும் ஆற்றல் கொண்ட ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்திக்கு இலங்கைத் திருநாட்டில் கொழும்பு மாநகருக்கு அணித்தாயுள்ள தெஹிவளை போதிருக்காராம வீதியில் கோவில் அமைத்து பரிபாலித்து வருகின்றார் ஸ்ரீமத் சந்திரசேகரசுவாமி அவர்கள். சுவாமி அவர்களின் அயரா முயற்சியின் காரணமாக ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயம்  அபார கருணாமூர்த்தி என அழைத்துத் துதிக்கப்படும் ஆஞ்சநேயர் பெருமானுக்கு இலங்கையில் முதன்முதலில் ஆலயம் அமைத்த பெருமை ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகளையே சாரும்

அழியாத உண்மைப் பொருளாய் உலகமெல்லாம் வியாபித்திருந்து, அனைத்தையுமே கடந்தபடியால் கடவுள் என்னும் பெயர்பெற்; அந்த பிரம்மப் பொருளுக்கு மனதாலே உருக்கொடுத்து, அகக்கண்ணின் முன்நிறுத்தி, ஜம்புலனையும் அடக்கி ஆண்டவனை வழிபடும் ஒரே இடம் கோவில்.

அந்த இடத்திலே, ஆன்மாக்கள் இறையருளைப்பெற்றிட காட்டாறு வெள்ளமாய்க், கட்டற்று பாயும் மனதை நிலைநிறுத்தி, அவ் எண்ணத்தாலேயே மனதில் நிறுத்தி தியானித்திருந்து எமது மனப்பாரங்கள் யாவற்றையும் களைந்துவிடும் அவ்வேளையில் அந்த சூட்சுமப்பொருளை திருவுருவாய் சிருஷ்டித்து ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகளின் பொற்கரங்களினால் நடாத்தும் அற்புதமான அபிஷேகமும், அதன் போது எங்களுக்காக சுவாமிகள் நடாத்தும் அற்புதமான மன்றாட்டமும், அதன் நிமித்தம் அந்தத் திருவுருவச் சிலைகளில் காணப்படும் தெய்வீகத் தன்மையும் கண்ணாரக் கண்டு அவ் விக்கிரகங்களின் முன் மண்டியிட்டிருந்து, எம் துன்பங்கள், துயரங்கள் யாவையும் கூறி வழிபட்டால் சாந்தி பெறாத மனமுண்டோ?

இந்த உன்னதமான வேளையில் திருவுருவாய் அமர்ந்திருந்து தன்பூரிப்பை எமக்குக் காட்ட மூத்த விநாயகனும், வாணி சரஸ்வதியும், வீர மாருதியும், அன்னை ஆதிபராசக்தியும், முருகப்பெருமானும் அவ்வவ்வேளையில் எம் சந்திரசேகர சுவாமிகளின் திருமேனியில் தாம்தோன்றி ஆனந்த நடனமிடுவதை காண இவ்விருகண் போதாது. ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகளின் மன்றாட்டத்துடன் கூடிய அபிஷேகமும் ஆராதனைகளும் எம்மை ஆண்டவனுக்கருகில் கொண்டு செல்கின்றது.

பூஜை நடைபெறும் சமயத்தில் சுவாமிகள் மன்றாடும் பாங்கு சொல்லும் தகைமையதன்று. கண்களை மூடிக்கொண்டு, ஜம்புலன்களையும் அடக்கித் தியானிக்கும்படி சுவாமி பக்தர்களை கேட்டுக்கொள்வார் கையிலிருக்கும் கோலினால்மளார் மளார்என்று படங்களைப் போட்டு அடிப்பார். பக்தர்கள் படும் துன்பங்கள் துயரங்கள் தடைகளைப் போக்க அவர்களுக்காக வாய்விட்டு உரத்த சத்தத்துடன்  மன்றாடுவார்.

மேலும் சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தை பொறுத்தவரையில் சுவாமி அவர்கள் குறிப்பிட்டது போல இவ்வாலயம் ராம வள்ளலின் பெயரைத் தாங்கிநிற்கும் மிகவும் பொருத்தமான வீதியில்- 311, ஸ்ரீ போதிருக்காராம வீதியில்(விகாரை லேன்), களுபோவில தெஹிவளையில் அமைந்திருப்பது விசேடமாக குறிப்பிடக்கூடியதொன்றாகும். ஏனைய இடங்களுடன் ஒப்பீட்டளவில் பார்க்கும்போது, ஓரளவு சிறிய இடமாக இருந்தாலும். அதன் கீர்த்தி பெரிதாக விளங்குவதை காணலாம். சிறுவர் சிறுமிகளும், மாணவ மாணவிகளும், இளைஞார் யுவதிகளும், வயது வந்தோரும், முதியோருமாகப் பலதரப்பட்டவராய் வந்து வணங்குபவர்களுக்கும், கடல் கடந்த நாடுகளில் வாழும் பலருக்கும் சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயம் ஒரு சரணாலயமாக விளங்கி வருகின்றது.

இவ்வாலயத்தில் பூசைகள் அபிஷேகங்கள் அன்னதானங்கள் யாகங்கள் செய்வோர் அளப்பரிய அனுகூலங்களையும் நன்மைகளையும் அடைகின்றனர். கோவில் நிர்வாகம் பக்தர்களின் நிலைமைக்கேட்பவும் வசதிக்கேற்பவும் இசைந்துகொடுப்பதானது, மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விட்டது

இவ்வாலயத்தில் ஆங்கில புதுவருடப்பிறப்பு, தைப்பொங்கல் மாசிமகம், ராமநவமி, தமிழ் சிஙகள புது வருடப்பிறப்பு, ஆடிப்பூரம், புரட்டாதிச்சனி, நவராத்திரி பூஜை, தீபாவளி, கந்த சஷ்டி, ஆஞ்சநேயர் ஜெயந்தி போன்ற விசேட வைபவங்களும் வழக்கமாக நடைபெறுகின்றது. மற்றும் போயா தினங்களில் பாடசாலை மாணவர்களுக்காக சரஸ்வதி தேவிக்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறுகின்றன.  ஸ்ரீ ஆஞ்சநேயர் எண்ணற்ற பக்தர்களை தம்பால் ஈர்த்துக் கேட்டவர்க்குக் கேட்டபடி இன்னருள் புரிகின்றார். நான் படும்பாடனைத்தையும் எனைப்படைத்த அந்த நான்முகன்தான் அறிவாரோ, அல்லது என் கணக்கை நாளும் பொழுதும் எழுதித்தள்ளும் சித்திரகுப்தன்தான்  அறிவாரோ என்று ஏங்கித் தவிக்கும் எண்ணற்ற பக்தர்களுக்கெல்லாம் தஞ்சமென்றிருக்கின்றார் ஆஞ்சநேயமூர்த்தி. அவரின் அருளைத் துணையாகக் கொண்டு, நாடுவிட்டு நாடுசென்று வெளிநாடுகளில்வாழும் இளைஞார், யுவதிகள் எல்லோருக்கும் சரணாகதியாக இருப்பவரும் ஆஞ்சநேயரன்றோ! கடல்கடந்த நாடுகளிலிருந்து அவர்கள் ஆஞ்சநேயரை வாழ்த்துகின்றார்கள், வணங்குகின்றார்கள், வாரிவழங்குகின்றார்கள் ராம தூதனின் தூதனை - ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகளை அவர்கள் நன்றிக்கடனோடு நினைவுகூறுகின்றார்கள்.  

ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான  www.anjaneyar.com என்ற இணையத்தளத்தினூடாக பக்தர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதோடு  ஆலய பூஜைவிபரங்கள், ஆலய நிகழ்வுகளின் புகைப்படங்கள், காணொளிகள், என்பவற்றையும் பார்வையிட முடியும்.  

 

 

 

Last Updated ( Monday, 05 April 2010 12:19 )